இந்தியாவை வெல்ல வேண்டும் என்றால் அது ராகுல் திராவிட் எனும் பெருஞ்சுவரை தகர்த்தால் மட்டும்தான் முடியும் என முன்னொரு காலத்தில் சர்வதேச கிரிக்கெட் அணிகள் அவரது விக்கெட்டை வீழ்த்த வியூகம் அமைத்து செயல்பட்டது உண்டு. அந்த அளவுக்கு ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் படைத்தவர். எந்தவித ஆர்பாட்டமோ, அதிரடியோ இல்லாமல் பூப்பாதையில் அமைதியாகவும், நேர்த்தியாகவும் தனது ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் திராவிட். அவருக்கு இன்று பிறந்தநாள்.
சர்வதேச கிரிக்கெட்டில் தனது பேட்டால் கோலோச்சிய ஜாம்பவான்களில் ஒருவர். பவுலர்கள் வேக வேகமாக வந்து வீசும் பந்தை மிகவும் கூலாக தடுத்து ஆடும் கலையில் கைதேர்ந்தவர். சிறந்த தடுப்பாட்டக்காரர். அணியின் வீரராக, விக்கெட் கீப்பராக, கேப்டனாக என பன்முக வீரராக செயல்பட்டவர். இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் என்ற பொறுப்பை கவனித்து வருகிறார்.
இவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வரை முன்னேறி இருந்தது. அனுபவம் மற்றும் இளமை என இரண்டும் இணைந்த இந்திய அணியை கட்டமைத்து வருகிறார். எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இவரது சீரான பயற்சியின் கீழ் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது குறைந்த ஸ்ட்ரைக் ரேட் காரணமாக இந்திய ஒருநாள் அணியில் இருந்து டிராப் செய்யப்பட்டார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் ஒருநாள் அணியில் கம்பேக் கொடுத்தவர். மிகவும் டெக்னிக்கலாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்.
அவரது சாதனை துளிகள்..