தனது டெஸ்ட் வாய்ப்பை பறிப்பது மேத்யூ வேட் என்று ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அதாவது இருவரும் விக்டோரியா அணிக்கு ஆடிவருகின்றனர், இந்நிலையில் ஷெபீல்டு ஷீல்டு உள்நாட்டு போட்டியில் மேத்யூ வேட் தனக்கு முன்னால் களமிறங்குவது தனது டெஸ்ட் வாய்ப்பை பறிக்கிறது என்று கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.
முதல் தர கிரிக்கெட்டில் அருமையாக ஆடி வரும் கிளென் மேக்ஸ்வெல், விக்டோரியா கேப்டன் மேத்யூ வேட் தனக்கு முன்னால் இறங்கி தன் வாய்ப்பைக் காலி செய்வதால்தான் தற்போது டெஸ்ட் போட்டியில் இருப்பதாகக் கருதுகிறார் கிளென் மேக்ஸ்வெல்.
“இது மிகவும் வேதனையளிக்கிறது, அதுவும் ஒரு விக்கெட் கீப்பருக்கு பின்பு களமிறங்குவது என்பது நிச்சயம் வேதனைதான். அணியில் கூடுதல் பவுலரைக் கொண்டு வரும் தருணங்கள் நீங்கலாக விக்கெட் கீப்பர் 7-ம் நிலையில்தான் களமிறங்க வேண்டும்.
இருந்தாலும் நான் எந்த டவுனில் இறங்கினாலும் என்னால் இயன்றவரை சிறப்பாக ஆடி ரன்கள் குவித்து வருகிறேன். 8-ம் நிலையில் இறங்கி விக்டோரியாவுக்காக சதம் அடித்தேன்.
மேத்யூ வேட் கேப்டன் எனவே அவர்தான் பேட்டிங் வரிசையைத் தீர்மானிக்கிறார், பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் பல மட்டத்தில் உயர்வடைந்திருக்கிறேன், எனவே இந்தியாவுக்கு சென்று ஆடும் டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்கிறார் கிளென் மேக்ஸ்வெல் வேதனையுடன்.
கடந்த 3 உள்நாட்டு சீசன்களில் கிளென் மேக்ஸ்வெல் சராசரி 50க்கு அருகில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேத்யூ வேடின் சராசரி 38 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ஆஸ்திரேலியா அணிக்காக தேர்வு செய்யப்பட்ட நிக் மேடின்சனை விடவும் கிளென் மேக்ஸ்வெல் நன்றாக ஆடிவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.