குவாஹாட்டி: இலங்கைக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் ஜஸ்பிரீத்பும்ரா சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் பயிற்சியின் போது அசவுகரியமாக உணர்ந்ததால் இலங்கைக்கு எதிராகஇன்று குவாஹாட்டியில் நடைபெறும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்தியஅணியினருடன் பும்ரா பயணிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்தொடருக்கு முன்னதாக முழுஉடற்தகுதியை எட்ட பும்ராவுக்கு கால அவகாசம் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் இருந்து பும்ரா விலகியுள்ளார். இம்மாதஇறுதியில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒருநாள்போட்டி தொடரிலும் பும்ரா பங்கேற்பது சந்தேகம் தான்.