விளையாட்டு

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் | சானியா மிர்சா ஜோடி தோல்வி

செய்திப்பிரிவு

அடிலெய்டு: அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் அனா டானிலினா ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செக்குடியரசின் பெட்ரா விட்டோவா 6-3, 7-5 என்ற நேர் செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவை வீழ்த்தினார். மற்றொரு செக்குடியரசு வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா 2-6, 4-6 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸிடம் தோல்வியடைந்தார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் அனா டானிலினா ஜோடி தங்களது முதல் சுற்றில் செக்குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, ஸ்டிரோம் ஹண்டர் ஜோடியை எதிர்த்து விளையாடியது. சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா, அனா டானிலினா ஜோடி 6-3, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

SCROLL FOR NEXT