கோப்புப்படம் 
விளையாட்டு

ஆசியக் கோப்பை 2023-ல் ஒரே குழுவில் இந்திய, பாகிஸ்தான் அணிகள்: ஜெய் ஷா அறிவிப்பு

செய்திப்பிரிவு

மும்பை: எதிர்வரும் ஆசியக் கோப்பைக்கான தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன. செப்டம்பர் மாதம் இந்தத் தொடர் நடைபெற உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் இந்தத் தொடர் நடைபெற உள்ளதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

2023 மற்றும 2024 என இரண்டு ஆண்டுகளுக்கான ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் தொடர்கள் குறித்த அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில்தான் இந்த விவரம் வெளியாகி உள்ளது. மொத்தம் 145 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தகுதி பெறும் அணி என மொத்தம் ஆறு அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. ஒருநாள் கிரிக்கெட் இந்தத் தொடர் ஃபார்மெட்டில் நடைபெறுகிறது. மொத்தம் 13 போட்டிகள். குரூப் சுற்று, சூப்பர்-4 சுற்று மற்றும் இறுதிப் போட்டி. இதில்தான் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளன.

ஆசியக் கோப்பை 2023 தொடர் பாகிஸ்தானில்தான் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்ல முடியாது என்றும். அதனால் இரு நாடுகளுக்கும் பொதுவான தளத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என முன்னர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார். அதனால், இந்தத் தொடர் எங்கு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

SCROLL FOR NEXT