விளையாட்டு

கிளென் மெக்ரா தேர்ந்தெடுத்த 2016-ம் ஆண்டின் டெஸ்ட் அணிக்கு கேப்டன் கோலி; அணியில் அஸ்வின்

இரா.முத்துக்குமார்

ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சு நட்சத்திடன் கிளென் மெக்ரா 2016-ம் ஆண்டிற்கான தனது விருப்ப டெஸ்ட் அணியை தேர்வு செய்துள்ளார், இந்த அணிக்கு விராட் கோலி கேப்டன். அணியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.

புள்ளி விவரங்கள் அடிப்படையில் அணியைத் தேர்வு செய்தீர்களா என்ற கேள்விக்குப் பதில் அளித்த மெக்ரா, “புள்ளிவிவரங்கள் அடிப்படையில் மட்டுமல்ல. புள்ளிவிவரங்களும் முக்கியம், ஆனால் அணுகுமுறை, ஆட்டத்தின் போது தன்னை எப்படி ஒருங்கிணைத்து நிலைநிறுத்துகிறார், அவரால் ஆட்டத்தில் ஏற்படும் தாக்கம் ஆகியவை அடிப்படையில் தேர்வு செய்துள்ளேன்.

விக்கெட் கீப்பராக குவிண்டன் டி காக் எனக்கு பிடித்தமானவர், ஆனால் ஜானி பேர்ஸ்டோவுக்கு இந்த ஆண்டு அருமையாக அமைந்தது. அவர் 1470 ரன்களை நல்ல சராசரியில் எடுத்துள்ளார், அதனால் இதனை மீறி நான் முடிவு எடுக்கவில்லை” என்றார்.

மெக்ரா லெவன் வருமாறு:

டேவிட் வார்னர், ஜோ ரூட், விராட் கோலி (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ரவி அஸ்வின், மிட்செல் ஸ்டார்க், கேகிசோ ரபாடா, யாசிர் ஷா

SCROLL FOR NEXT