நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகி றது. அந்த அணிக்கும் ஆஸ்திரே லிய அணிக்கும் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று நடந்தது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார்.
மிகப்பெரிய ஸ்கோரை எட்டும் கனவுடன் களமிறங்கிய ஆஸ்திரே லிய அணிக்கு தொடக்கம் அத் தனை இனிமையாக இல்லை. அந்த அணியின் பிஞ்ச் (0), வார்னர் (24 ரன்கள்), பெய்லி (17 ரன்கள்), மிட்செல் மார்ஷ் (1 ரன்) ஆகியோர் குறைந்த ரன்களில் அவுட் ஆக ஒருகட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 20.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் என்ற நிலையில் தள்ளாடியது.
இந்த இக்கட்டான நேரத்தில் டிராவிஸ் ஹெட்டுடன் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு 127 ரன் களைச் சேர்த்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், தனது அணியை தூக்கி நிறுத்தினார். 52 ரன்களில் ஹெட் அவுட் ஆன பிறகு வேடுடன் (38 ரன்கள்) சேர்ந்து ரன் வேட்டையைத் தொடர்ந்த ஸ்டீ வன் ஸ்மித் 157 பந்துகளில் 164 ரன்களைக் குவித்து ஆஸ்திரேலிய அணி சிறந்த ஸ்கோரை எட்ட உத வினார். மேலும் சிட்னி மைதானத் தில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
ஸ்மித்தின் ரன் வேட்டை காரணமாக ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 324 ரன்களை எடுத்தது.
வெற்றிபெற 325 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் பேட் டிங் செய்யவந்த நியூஸிலாந்து அணி, 34 ரன்களை எடுப்பதற்குள் லதாம் (2 ரன்கள்), வில்லியம்சன் (9 ரன்கள்) ஆகியோரின் விக்கெட் களை இழந்தது. இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த குப்திலும், நீஷமும் அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3-வது விக்கெட் ஜோடியாக அவர்கள் இருவரும் சேர்ந்து 92 ரன்களைச் சேர்க்க நியூஸிலாந்து அணிக்கு கொஞ்சம் நம்பிக்கை துளிர்த்தது. ஆனால் 34 ரன்களில் நீஷமும், 6 ரன்களில் வாட்லிங்கும் அடுத்தடுத்து அவுட் ஆக அந்த அணி மீண்டும் சரிவுப் பாதைக்கு திரும்பியது.
நியூஸிலாந்தின் சரிவைத் தடுத்து நிறுத்த தன்னந்தனியாக போராடிய குப்தில் 102 பந்துகளில் 114 ரன்களைக் குவித்தார். ஆனால் மற்ற வீரர்கள் அவருக்கு கை கொடுக்காததால் நியூஸிலாந்து அணி, 44.2 ஓவர்களில் 256 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.