விளையாட்டு

விஜேந்தர் - செகா இன்று மோதல்

செய்திப்பிரிவு

ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொள்ளும் ஆட்டத்தில் இந்தியாவின் விஜேந்தர் சிங், தான்சானியா நாட்டை சேர்ந்த முன்னாள் உலக சாம்பியனான பிரான்சிஸ் செகாவுடன் இன்று மோதுகிறார். டெல்லியில் இன்று மாலை 6.30 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

34 வயதான செகா 43 போட்டி களில் 32-ல் வெற்றி பெற்றுள்ளார். இதில் 17 நாக் அவுட் வெற்றிகளும் அடங்கும். 16 வருட குத்துச்சண்டை வாழ்க்கையில் செகா 300 ரவுண்டு களை சந்தித்துள்ளார். டபிள்யூபிஎப் உலக முன்னாள் சாம்பியனான செகா, தற்போது கண்டங்களுக்கு இடையேயான சூப்பர் மிடில்வெயிட் சாம்பியனா கவும் உள்ளார்.

விஜேந்தர் சிங் இதுவரை மோதிய 7 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல் வெற்றி நாயகனாக வலம் வருகிறார். 7 போட்டிகளில் 6-ல் நாக்வுட் வெற்றி பெற்ற விஜேந்தருக்கு செகாவுடனான போட்டி மிகுந்த சவாலாக இருக்கும் என கருதப் படுகிறது.

SCROLL FOR NEXT