பும்ரா, ஆர்ச்சர், பெரண்டார்ஃப், ரிச்சர்ட்சன் 
விளையாட்டு

IPL 2023 ஏலம் | ஸ்பீடு... ஸ்பீடு... மும்பையின் அதிவேக நால்வர் ‘4J’ கூட்டணி!

செய்திப்பிரிவு

கொச்சி: எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கான ஏலம் கொச்சி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் கணக்கை கூட்டி கழித்து பார்த்து வீரர்களை வாங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஏலத்தில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சனை 1.50 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

இதன்மூலம் மும்பை அணி எதிர்வரும் சீசனில் எதிரணி பேட்ஸ்மேன்களை அதிவேக பவுலிங் கூட்டணி மூலம் அச்சுறுத்தும் எனத் தெரிகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த நான்கு பவுலர்களின் பெயரும் ஆங்கில எழுத்தான ‘J’-வில் தொடங்குகிறது.

அந்த அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஜோப்ரா ஆர்ச்சர், ஜேசன் பெரண்டார்ஃப், ஜை ரிச்சர்ட்சன் என நான்கு அபார வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். நான்கு பேரும் ஆட்டத்தில் தாக்கம் ஏற்படுத்தும் திறன் படைத்த வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் வலது கை வேகப்பந்து வீச்சாளர்கள். இதில் பும்ரா, ஆர்ச்சர், பெரண்டார்ஃப் என மூவரும் அந்த அணியில் கடந்த சீசனிலேயே இடம் பெற்றவர்கள். புதிதாக ரிச்சர்ட்சன் இணைந்துள்ளார்.

பும்ராவுக்கு அறிமுகம் தேவையில்லை. ஆர்ச்சர் சர்வதேச கிரிக்கெட் களத்தில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். காயத்தில் இருந்து மீண்ட அவர் வரும் ஜனவரியில் களத்திற்கு திரும்ப உள்ளார். பெரண்டார்ஃப் மற்றும் ஜை ரிச்சர்ட்சன் என இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT