கொச்சி: எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனுக்கான மினி ஏலம் கொச்சி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பத்து அணிகளும் தங்கள் தேவைகளை மனதில் வைத்து ஏலத்தில் வீரர்களை வாங்கி வருகின்றன. மும்பை, சென்னை போன்ற அணிகள் இந்த ஏலத்தில் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அது சார்ந்த நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
ஹைதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப், சென்னை, குஜராத், டெல்லி, மும்பை, லக்னோ, பெங்களூரு போன்ற அணிகள் இந்த ஏலத்தில் வீரர்களை வாங்க ஆர்வம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது. இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடிய பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்கள், வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என 5 செட் வீரர்கள் ஏலத்தில் வந்துள்ளனர். இதில் அதிக விலை கொடுத்து அணிகளால் வாங்கப்பட்டுள்ள டாப் 5 வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்.