கொச்சி: ஐபிஎல் 2023 சீசனுக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்கை ஏலத்தில் எடுக்க அணிகளிடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால், இறுதி வரை விட்டுக் கொடுக்காத சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இங்கிலாந்து நாட்டை 23 வயதான இவர் தரமான பார்மில் உள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மூன்று சதங்கள் பதிவு செய்து அசத்தியுள்ளார். இவரின் அடிப்படை விலை ரூ.1.5 கோடி. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடியவர். 48 பந்துகளில் சதம் பதிவு செய்துள்ளார். மிடில் ஆர்டரில் கச்சிதமாக பொருந்துகிற பேட்ஸ்மேன்.
அவரை ஏலத்தில் எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளிடையே கடுமையான போட்டி இருந்தது. இதில் ஹைதராபாத் அணி கைவசம் அதிக தொகை (ரூ.42.25 கோடி) இருந்த காரணத்தால் அவரை 13.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அவரது அடிப்படை விலை ரூ.1.5 கோடி.
இந்த ஏலத்தில் முதல் வீரராக வந்த கேன் வில்லியமிசன்னை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது குஜராத் டைட்டன்ஸ். அதே போல மயங்க் அகர்வாலை 8.25 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் போட்டி போட்டு வாங்கியது ஹைதராபாத். பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளும் அவரை வாங்கன். ரஹானேவை அடிப்படை விலைக்கு வாங்கியது சென்னை அணி. முதல் செட்டில் இடம் பெற்ற ஜோ ரூட் மற்றும் ரைலி ரூசோவை எந்த அணியும் வாங்கவில்லை.