ரஞ்சி கோப்பையில் குஜராத்-தமிழகம் இடையிலான ஆட்டம் கர்நாடக மாநிலம் பெலகாவில் நடை பெற்றது. இதன் முதல் இன்னிங் ஸில் குஜராத் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய தமிழக அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 229 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 580 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து அத்துடன் ஆட்டம் டிராவில் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக அணி தரப்பில் கவுசிக் காந்தி 538 பந்துகளில், 25 பவுண்டரிகளுடன் 202 ரன்களும், விஜய் சங்கர் 102, அபிநவ் முகுந்த் 99, பாபா அபராஜித் 54 ரன்களும் சேர்த்தனர். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதால் தமிழக அணிக்கு 3 புள்ளிகள் கிடைத்தது. அதேவேளையில் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததால் குஜராத் அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் இரு அணிகளும் தலா 26 புள்ளிகளுடன் ஏ பிரிவில் இருந்து கால் இறுதிக்கு முன்னேறின.