*
முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் மேல் குவித்து இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்தது இங்கிலாந்து அணி. இதற்கு முன்னர் அந்த அணி 432, 400 ரன்கள் குவித்தும் இன்னிங்ஸ் தோல்வி கண்டுள்ளது.
*
இந்திய அணி டெஸ்ட் தொடரை 4-0 என கைப்பற்றுவது இது 2-வது முறை. இதற்கு முன்னர் 2012-13ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4-0 என வென்றிருந்தது.
*
ஜடேஜா இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 10 விக்கெட்கள் வீழ்த்துவது இதுவே முதன்முறை.
*
இந்த தொடரில் இங்கிலாந்து கேப்டன் குக்கை ஜடேஜா 6 முறை வீழ்த்தியுள்ளார். குறிப்பட்ட ஒரு வீரரை இந்திய பந்து வீச்சாளர் ஒரே தொடரில் அதிகமுறை வீழ்த்துவது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் ஒரே வீரரை 5 முறை ஆட்டமிழக்க செய்த 20 சம்பவங்களும் இந்திய வீரர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் அஸ்வின் இந்த தொடரில் பென் ஸ்டோக்ஸை 5 முறை வீழ்த்தியதும் அடங்கும்.
*
தொடர்ச்சியாக 18 டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை தேடிக் கொடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனையை கோலி பெற்றுள்ளார். இவர் தலைமையில் 14 வெற்றிகள் கிடைத்துள்ளது.
*
இங்கிலாந்து இந்த ஆண்டில் 8 டெஸ்ட்டில் தோல்வியை சந்தித்துள்ளது.