லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது அர்ஜென்டினா.
பிரான்ஸ் அணி பின்தங்கிய நிலையில் இரண்டாவது பாதியை தொடங்கியது. ஆனால், ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அணிக்கு தேவையான முதல் கோலை பதிவு செய்தார் பிரான்ஸ் வீரர் எம்பாப்பே.
அந்த அதிர்ச்சியில் இருந்து அர்ஜென்டினா மீண்டு வருவதற்குள் அடுத்த சில நொடிகளில் இரண்டாவது கோலை பதிவு செய்தார் எம்பாப்பே. இதன் மூலம் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்களை பதிவு செய்த வீரராக அவர் உள்ளார். மொத்தம் 7 கோல்களை இந்த தொடரில் அவர் பதிவு செய்துள்ளார்.
இரண்டாவது பாதி ஆட்டமும் முடிந்த நிலையில் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் உள்ளதால் இந்தப் போட்டி எக்ஸ்ட்ரா டைமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்ட்ரா டைம் ஆட்டம் கூடுதலாக 30 நிமிடங்கள் நடைபெற்றது. அதிலும் முடிவு எட்டப்படாத காரணத்தால் பெனால்டி ஷூட்-அவுட் நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது: விரிவாக வாசிக்க..