லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் முதல் பாதி முடிவின் போது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
கத்தார் நாட்டின் லுசைல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியை பார்க்க ஆர்வமுடன் ரசிகர்கள் குவிந்துள்ளனர். அதில் அர்ஜென்டினா ரசிகர்கள்தான் அதிகம். இந்தப் போட்டிதான் மெஸ்ஸியின் கடைசிப் போட்டி.
ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கோலாக மாற்றி இருந்தார் மெஸ்ஸி. நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவர் பதிவு செய்துள்ள ஆறாவது கோல் இது. இதன் மூலம் இந்தத் தொடரில் அதிக கோல் பதிவு செய்த வீரர்களில் முதலிடத்தில் அவர் இப்போதைக்கு உள்ளார்.
அதே போல ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் சிறப்பான பாஸ் ஒன்றை மேற்கொண்ட அர்ஜென்டினா அணி வீரர்கள் அருமையாக அதை கோலாக மாற்றி இருந்தனர். இந்த கோலை டி மரியா பதிவு செய்திருந்தார். ஆனாலும் அது அந்த அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
இதன் மூலம் 45 மற்றும் 7 நிமிடங்கள் கூடுதல் நேரத்துடன் முடிவடைந்த முதல் பாதியில் 2-0 என அர்ஜென்டினா முன்னிலை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணிக்கு ரிதம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மறுபக்கம் அர்ஜென்டினா வீரர்கள் பிரான்ஸ் அணியின் தடுப்பு அரணை சுலபமாக தகர்த்து, கோல் ஆக்கும் முயற்சியையும் மேற்கொண்டு வருவது பார்க்க முடிகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றது: விரிவாக வாசிக்க..