விளையாட்டு

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்: நவ்ஜீத்துக்கு வெண்கலம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் யூஜீனில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வட்டு எறிதல் வீராங்கனை நவ்ஜீத் கௌர் தில்லான் வெண்கலப் பதக்கம் வென்றார்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் அவர் 56.36 மீ. வட்டு எறிந்ததன் மூலம் தனது அதிகபட்ச தூர சாதனையையும் (பெர்சனல் பெஸ்ட்) பதிவு செய்தார். இதற்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற ஜூனியர் ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் நவ்ஜீத் கௌர் 53.97 மீ. தூரம் வட்டு எறிந்ததே அவருடைய “பெர்சனல் பெஸ்ட்” ஆக இருந்தது.

உலக ஜூனியர் வட்டு எறிதலில் இந்தியா வென்ற 2-வது பதக்கம் இது. இதற்கு முன்னர் 2002-ல் இந்தியாவின் சீமா அந்தில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT