விளையாட்டு

அரை இறுதியில் சிந்து தோல்வி

செய்திப்பிரிவு

உலக தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண் டுள்ள உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் தொடர் துபையில் நடைபெற்று வருகிறது.

இதில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து நேற்று அரை இறுதியில் 4-ம் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை எதிர்த்து விளையாடினார். இதில் சிந்து முதல் செட்டை 15-21 என இழந்தார். எனினும் 2-வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்து 21-18 என கைப்பற்றினார். இதனால் 3-வது செட் பரபரப்பானது. ஆனால் இந்த செட்டை 15-21 என சிந்து இழந்தார். முடிவில் 21-15, 18-21, 21-15 என்ற செட் கணக்கில் சங் ஜி ஹியூன் வெற்றி பெற்றார்.

SCROLL FOR NEXT