விளையாட்டு

காமன்வெல்த் பளுதூக்குதல்: இந்திய வீரர் விகாஸுக்கு வெள்ளிப் பதக்கம்

செய்திப்பிரிவு

காமன்வெல்த் போட்டியில் ஆடவருக்கான 85 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில் இந்திய வீரர் விகாஸ் தாகூர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

20-வது காமன்வெல்த் போட்டிகள், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் பதக்கப்பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது.

இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், இந்திய பளுதூக்கும் வீரர் விகாஸ் தாகூர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

21-வயதான விகாஸ் மொத்தம் 333 கிலோ எடையை தூக்கினார். 150 கிலோவை ஸ்நாட்ச் முறையிலும், 183 கிலோவை கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவிலும் அவர் தூக்கினார். இப்போட்டியில் தங்கப் பதக்கத்தை நியூசிலாந்து வீரர் வென்றார்.

SCROLL FOR NEXT