காமன்வெல்த் போட்டியின் மகளிர் டிரையத்லான் பிரிவில் இங்கிலாந்து வீராங்கனை ஜோடி ஸ்டிம்ப்சன் தங்கம் வென்றார். இதன்மூலம் இந்த காமன்வெல்த் போட்டியில் முதல் பதக்கத்தை வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார் ஸ்டிம்ப்சன். இதேபிரிவில் கனடாவின் கிர்ஸ்டன் ஸ்வீட்லேன்ட் வெள்ளிப் பதக்கமும், இங்கிலாந்தின் மற்றொரு வீராங்கனையான விக்கி ஹாலன்ட் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.