கோப்புப்படம் 
விளையாட்டு

FIFA WC 2022 | காலிறுதியில் பலப்பரீட்சை செய்யும் அணிகளின் விவரம்

செய்திப்பிரிவு

தோகா: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் காலிறுதி சுற்றை எட்டியுள்ளது. வரும் வெள்ளி மற்றும் சனி அன்று காலிறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பலப்பரீட்சை செய்யும் அணிகளின் விவரம் குறித்து பார்ப்போம்.

கடந்த நவம்பர் 20-ம் தேதி உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கின. வரும் 18-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. குரூப் சுற்று மற்றும் ரவுண்ட் ஆப் 16 சுற்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. குரோஷியா, அர்ஜென்டினா, பிரேசில், நெதர்லாந்து, பிரான்ஸ், மொராக்கோ, இங்கிலாந்து மற்றும் போர்ச்சுகல் என எட்டு அணிகள் காலிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இதில் எந்தெந்த அணிகள் காலிறுதியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்கிறது..

  • குரோஷியா vs பிரேசில்
  • நெதர்லாந்து vs அர்ஜென்டினா
  • மொராக்கோ vs போர்ச்சுகல்
  • இங்கிலாந்து vs பிரான்ஸ்

இதில் வெற்றி பெறும் அணிகள் 14 மற்றும் 15-ம் தேதி நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் விளையாடும். அரையிறுதியில் தோல்வியை தழுவும் அணிகள் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் 17-ம் தேதி விளையாடும். தொடரின் இறுதிப் போட்டி 18-ம் தேதி நடைபெறும்.

SCROLL FOR NEXT