விளையாட்டு

மரினை வீழ்த்தினார் சிந்து

செய்திப்பிரிவு

துபையில் நடைபெற்று வரும் உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதிக்கு முன்னேறினார்.

நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் சிந்து 21-17, 21-13 என்ற நேர் செட்டில் 5-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரினை வீழ்த்தினார். இதன் மூலம் ரியோ ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் அவரிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக்கொண்டார்.

SCROLL FOR NEXT