அகமதாபாத்: நடப்பு விஜய் ஹசாரே கோப்பையின் இறுதிப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை ருதுராஜ் கெய்க்வாட் பதிவு செய்துள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில் மகாராஷ்டிர அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ், இரட்டைச் சதம் பதிவு செய்திருந்தார். அதன்பின், அரையிறுதியில் சதம் பதிவுச் செய்தார்.
இந்த நிலையில், சவுராஷ்டிரா அணியுடனான இறுதிப் போட்டியில் மீண்டும் சதம் பதிவு செய்துள்ளார். இப்போட்டியில் 131 பந்துகளில், 108 ரன்களை அவர் எடுத்துள்ளார். இதன் மூலம் தொடர்ச்சியாக அடுத்தடுத்த மூன்று போட்டிகளில் சதங்களை ருதுராஜ் பதிவு செய்துள்ளார். இந்த மூன்று சதங்களும் நாக்அவுட் போட்டிகளில் விளாசியுள்ளார். விஜய் ஹசாரே கோப்பை தொடர்களில் மட்டும் மொத்தம் 12 சதங்களை ருதுராஜ் பதிவு செய்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
- Shantanu
தொடர்ந்து சதங்களை எடுத்து வரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறன்றன.
ருதுராஜ் ஆட்டம் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி கூறும்போது, “அவர் தோனியைபோல் அமைதியானவர். அவர் பிறரைவிட பந்துகளை விரைவாக எதிர்கொள்கிறார்” என்று பாராட்டியுள்ளார். ருதுராஜ், ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.