விளையாட்டு

செக். குடியரசில் இந்திய கால்பந்து அணி

செய்திப்பிரிவு

23 வயதுக்குட்பட்ட இந்திய கால்பந்து அணி செக். குடியரசு நாட்டுக்கு சென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 23-ம் தேதி தொடங்குகின்றன. இதில் சிறப்பாக விளையாடுவதற்கான பயிற்சியை மேற்கொள் வதற்காக 25 பேர் கொண்ட இந்திய கால்பந்து அணி இப்பயணத்தை மேற்கொண்டுள்ளது.

செக். குடியரசில் உள்ள 3 கிளப் அணிகளுக்கு எதிராக 3 போட்டிகளில் நமது அணி விளையாட இருக்கிறது. நாடு திரும்பிய பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இரு நட்புரீதியிலான ஆட்டத்தில் இந்திய கால்பந்து அணி விளையாடுகிறது. இந்த போட்டிகள் பெங்களூரில் ஆகஸ்ட் 17 மற்றும் 20-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து இந்திய வீரர்கள் சீனாவுக்கு சென்று பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க இருக்கின்றனர்.

SCROLL FOR NEXT