டென்மார்க் அணிக்கு எதிராக கோல் பதிவு செய்யும் ஆஸ்திரேலிய வீரர் 
விளையாட்டு

FIFA WC 2022 | டென்மார்க்கை நாக்-அவுட் செய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது ஆஸி.

செய்திப்பிரிவு

அல் வக்ரா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் டென்மார்க் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் நிலையில் ஆஸ்திரேலியா அதை வெற்றிகரமாக செய்தது. 1-0 என டென்மார்க் அணியை வீழ்த்தியுள்ளது.

இந்த போட்டி அல் ஜானூப் மைதானத்தில் நடைபெற்றது. குரூப் ‘டி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இரு அணிகளும் இதில் பலப்பரீட்சை செய்தன. பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் பதிவு செய்யவில்லை.

இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்து அசத்தினார் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ. டென்மார்க் அணி இறுதி வரையில் ஒரு கோல் கூட பதிவு செய்யவில்லை. அதனால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று ‘டி’ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்தது. அதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது அந்த அணி.

இதே பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது பிரான்ஸ். மூன்றாவது இடத்தை துனிசியாவும், நான்காவது இடத்தை பிடித்த டென்மார்க் அணியும் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. குரூப் ‘சி’ போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைக்கும் நிலையில் உள்ளது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா.

SCROLL FOR NEXT