7 சிக்ஸர்கள் அடித்த ருதுராஜ் 
விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை: ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து ருதுராஜ் சாதனை

செய்திப்பிரிவு

அகமதபாத்: விஜய் ஹசாரே கோப்பையின் காலிறுதியில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்து மகராஷ்டிர வீரர் ருதுராஜ் ஜெய்க்வாட் சாதனை புரிந்துள்ளார்.

விஜய் ஹசாரே கோப்பை 2022, தொடரின் காலிறுதி போட்டியில் உத்தரப் பிரதேசம் - மராட்டிய அணிகள் இன்று மோதின. அகமதாபாத்தில் நடந்த இப்போட்டியில் முதலில் மகராஷ்டிரா அணி களம் இறங்கியது.

இதில் சிறப்பாக விளையாடிய மகாராஷ்டிர அணி 50 ஓவர் முடிவில் 330 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ருதுராஜ் அதிக பட்சமாக 159 பந்தில் 220 ரன்கள் குவித்தார். இதில் உத்தரப் பிரதேச வீரர் சிவா வீசிய 49 ஓவரில் ( ஒரு நோபால் உட்பட) ஏழு சிக்ஸர்களை அடித்து அதாவது ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி புதிய சாதனையும் ருதுராஜ் படைத்தார். ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் விளாசிய ருதுராஜுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ருதுராஜ் ஐபிஎல்லில் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT