விளையாட்டு

டி 20 ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்திய மகளிரணி

செய்திப்பிரிவு

மகளிர் டி 20 ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பாங்காக்கில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்திய அணி தனது 4-வது லீக் ஆட்டத்தில் நேற்று இலங்கையுடன் மோதியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. மிதாலி ராஜ் 59 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் விளாசினார்.

122 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இலங்கை மகளிர் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 69 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக சுரங்கிகா 20 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் பிரீத்தி போஸ், பிஸ்த் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.

52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய மகளிரணி 8 புள்ளிகளுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதுவரை இந்திய அணி மோதிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் இன்று நேபாளம் அணியுடன் இந்தியா மோதுகிறது.

SCROLL FOR NEXT