விருதை குடும்பத்துக்கு அர்ப்பணிக்கிறேன்
அஸ்வின் கூறும்போது, “ஐசிசி விருதுக்கு தேர்வாகி உள்ளது பெருமையாக உள்ளது. சச்சின் டெண்டுல்கர், டிராவிட் ஆகியோரை பின்பற்றி ஆண்டின் சிறந்த வீரர் விருதை பெற உள்ளது சிறப்பான விஷயம். கூடுதல் சிறப்பம்சமாக டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதும் கிடைத்துள்ளது.
பல ஆண்டுகள் சிறப்பாக அமைந்துள்ளன. ஆனால் இந்த ஆண்டு கூடுல் சிறப்பை சேர்த்துள்ளது. எனது வெற்றிக்கு பின்னால் பலர் இருக்கிறார்கள். இந்த விருதை எனது குடும்பத்துக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன். ஐசிசி மற்றும் இந்திய அணியின் சக வீரர்களுக்கும், உடற்பயிற்சி நிபுணர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
டெஸ்ட் போட்டிகளில் தோனி விலகிய பிறகு இந்திய அணி பெரிய அளவில் உருமாற்றம் பெற்றது. இளம் கேப்டனான கோலி பொறுப்பேற்றதும் நாங்கள் சரியான பாதையில் பயணிக்கிறோம்’’ என்றார்.
சிறந்த நடுவர் ஏராஸ்மஸ்
இந்த ஆண்டின் சிறந்த நடுவராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 52 வயதான மராயிஸ் ஏராஸ்மஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஐசிசியின் டேவிட் செப்பர்டு கோப்பை வழங்கப்பட உள்ளது. 2007-ம் ஆண்டு நைரோபியில் நடைபெற்ற கென்யா-கனடா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டியின் மூலம் நடுவராக ஏராஸ்மஸ் அறிமுகமானார். சிறப்பான செயல்பாட்டால் 2010-ல் ஐசிசி-யின் எலைட் பேனலில் சேர்க்கப்பட்டார்.