குடும்பத்தினருடன் டீ 
விளையாட்டு

FIFA WC 2022 | நாட்டுக்காக மகன் விளையாடியதைப் பார்த்து பெருமிதம் கொண்ட தாய் - வைரல் வீடியோ

செய்திப்பிரிவு

கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்தத் தொடரில் நாட்டுக்காக உலகக் கோப்பை தொடரில் தன் மகன் விளையாடியதைப் பார்த்து பெருமிதம் கொண்டுள்ளார் தாய் ஒருவர். தொலைக்காட்சியில் மகன் விளையாடுவதை பார்த்து உற்சாகத்தில் மூழ்கிய அவரது வீடியோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் தங்கள் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் பெற்றோர்களுக்கு ஒரே நோக்கம்தான். அது, தங்கள் பிள்ளைகள் விரும்பும் துறையில் அவர்கள் சாதிக்க வழிவகை செய்வது. பிள்ளைகள் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றால் பெற்றோர்கள் பேரானந்தம் கொள்வர். அந்த ஆனந்தத்தைக் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் பெற்றுள்ளார் கனடாவை சேர்ந்த டீ.

வெள்ளை ஜெர்சி அணிந்து விளையாடும் சாமுவேல் அயோமைட் அடேகுக்பே

இன்று அதிகாலை நடைபெற்ற குரூப் ‘எப்’ பிரிவில் கனடா மற்றும் பெல்ஜியம் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் கனடாவை சேர்ந்த 27 வயதான சாமுவேல் அயோமைட் அடேகுக்பே களம் கண்டார். களத்தில் பின்கள வீரராக விளையாடி வருகிறார். இந்தப் போட்டியில் மாற்று வீரராக அவர் களம் இறங்கினார். இந்தப் போட்டியை டிவியில் பார்த்துள்ளார் அவரது தாய் டீ. அப்போது தனது மகன் விளையாட களம் இறங்குவதை பார்த்து டீ மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார். அந்தக் காட்சி சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT