தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் சென்னையை சேர்ந்த ராம் எஸ்.கிருஷ்ணன் முதலிடம் பிடித்தார்.
தூத்துக்குடியில் மாவட்ட சதுரங்க கழகம், டீகே செஸ் பயிற்சி மையம் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 430 பேர் கலந்து கொண்டனர். போட்டி 9 சுற்றுகளாக நடைபெற்றன. நடுவராக சர்வதேச நடுவர் ஆனந்தராம் செயல்பட்டார்.
இதில் 8.5 புள்ளிகள் பெற்று சென்னையை சேர்ந்த இளைஞர் ராம் எஸ்.கிருஷ்ணன் முதலிடம் பிடித்தார். தூத்துக்குடி பி.ராஜசேகரன் 2-ம் இடத்தையும், மதுரை செல்வமுருகன் 3-ம் இடத்தையும், தூத்துக்குடி சின்னத்துரை 4-ம் இடத்தையும், திருநெல்வேலி சிவசுப்பிரமணியன் மனோஜ் 5-ம் இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி காமாட்சி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை மீனாகுமாரி, மாவட்ட சதுரங்க கழக பொருளாளர் ரங்கராஜன் ஆகியோர் பரிசு வழங்கினர். பேராசிரியர் ராஜதுரை, டீகே செஸ் பயிற்சி மையத் தலைவர் வசீகரன், செயலாளர் கற்பகவல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.