ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று புனேவில் உள்ள ஷிவ் சத்ரபதி விளையாட்டரங்கில் புனே சிட்டி எப்சி - எப்சி கோவா அணிகள் மோதின. ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் கோவா முதல் கோலை அடித்தது. ப்ரீகிக் மூலம் இந்த கோலை ரபேல் கோயல்ஹோ லூயிஸ் அற்புதமாக அடித்தார்.
அவர் அடித்த கர்லிங் எதிரணியின் தடுப்பு அரண்களை மீறி கோல் கம்பத்தின் இடது கார்னர் வழியாக இலக்கை அடைந்தது. இதனால் முதல் பாதியில் கோவா அணி 1-0 என முன்னிலை பெற்றது. கடைசி வரை போராடியும் புனே அணியால் பதிலடி கொடுக்க முடியாமல் போனது. முடிவில் கோவா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கோவா அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 8 ஆட்டத்தில் விளையாடி உள்ள அந்த அணி 7 புள்ளிகளுடன் பட்டியலில் 7-வது இடத்துக்கு முன்னேறியது. அதேவேளையில் 3-வது தோல்வியை சந்தித்த புனே 8-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.