டெல்லி: டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்ட இந்திய அணிக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்.
அடிலெய்டில் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்டுள்ளது இந்திய அணி. இதனையடுத்து இந்திய அணி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, அரையிறுதியில் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தாத இந்திய பேட்டிங் யூனிட்டை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடுமையாக சாடினார்.
இதேபோல் சச்சினும் தனது கருத்தை சொல்லியுள்ளார். இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ட்விட்டரில் சச்சின், "ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதுபோல வாழ்க்கைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நம் அணியின் வெற்றியை நம் சொந்த வெற்றியைப் போல் கொண்டாடினால், நம் அணியின் தோல்வியையும் நாம் ஏற்று கொள்ள வேண்டும்" என்று ஆதரவாக பதிவிட்டுள்ளார்.