கே.எல்.ராகுல் | கோப்புப்படம் 
விளையாட்டு

T20 WC | ஓப்பனிங்கில் சொதப்பிய கே.எல்.ராகுல் - ட்ரோல் செய்யும் ரசிகர்கள்

செய்திப்பிரிவு

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் வெறும் 5 ரன்களில் வெளியேறினார். அவரது மோசமான ஆட்டத்தை பார்த்து விரக்தி அடைந்த ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்துள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 4 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிராக 9 ரன்கள், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 9 ரன்கள், வங்கதேசத்திற்கு எதிராக 50 ரன்கள் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 51 ரன்கள் எடுத்திருந்தார். அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 ரன்கள் எடுத்தார். 6 இன்னிங்ஸில் மொத்தம் 128 ரன்கள். இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அதற்கு ராகுலின் மோசமான ஆட்டமும் ஒரு காரணம்.

பவர்பிளே பந்தை அடித்து ஆடாமல் மிகவும் எச்சரிக்கையோடு நிதானமாக ஆடி விக்கெட்டையும் இழந்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பவர்பிளே ஓவரில் மிகவும் மோசமாக ஆடி உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன்னர் 8.6 என இருந்த ரன் குவிப்பு விகிதம் இந்த தொடரில் 6.0 என சரிந்துள்ளது. அதுவே மிடில் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாகவே உள்ளது.

தொடக்க ஆட்டக்காரர் ராகுலின் இந்த பாணி ஆட்டம் ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது. ரசிகர்களின் ரியாக்‌ஷன்களில் சில...

  • முக்கிய போட்டிகளில் தொடர்ந்து சொதப்புகிறார்.
  • விக்கெட்டில் பவுன்ஸ் இருந்தது.
  • அவர் எத்தனை ஓவர் விளையாட விரும்புவார்.
  • உங்களது பேட்டில் இருந்து ரன் வர வேண்டும் ராகுல்.
  • முக்கியமான போட்டியில் ரன் அடிக்க வேண்டும் என்றால் அவர் காதுகளை மூடிக் கொள்வார்.
  • வாங்க.. வாங்க.. இந்த மோசமான இன்னிங்ஸ் மூலம் ரன் குவிக்காத வீரர்களுக்கான அகாடமியில் தனது விசுவாசத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
SCROLL FOR NEXT