சிட்னி: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் தோல்வியைத் தழுவி வெளியேறி உள்ளது நியூஸிலாந்து அணி. இந்த தோல்வியின் மூலம் அந்த அணியின் உலகக் கோப்பை கனவு தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இந்தத் தொடர் தொடங்கியபோது கோப்பையை வெல்லும் அணிகளில் ஃபேவரைட் அணியாக இருந்தது நியூஸிலாந்து. அந்த அணியின் ஆட்டமும் அப்படித்தான் இருந்தது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சுருட்டி போட்டது அதற்கு ஓர் உதாரணம்.
இருந்தும் நியூஸிலாந்து அணி லீக் போட்டிகளில் கெத்து காட்டுவதும், நாக்-அவுட் சுற்றில் தோல்வியை தழுவுவதும் வழக்கம். கடந்த காலங்களில் ஐசிசி உலகக் கோப்பை தொடர்களில் நியூஸிலாந்து அணியின் செயல்பாடும் அதுவே. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரிலும் அதுவே நடந்துள்ளது.
2015 முதல் நியூஸிலாந்தின் செயல்பாடு..