டிவில்லியர்ஸ் | கோப்புப்படம் 
விளையாட்டு

திறமையான வீரர்கள் அதிகம் - இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்லும் என டிவில்லியர்ஸ் கணிப்பு

செய்திப்பிரிவு

மும்பை: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் கணித்துள்ளார். இந்திய அணி நாளை மறுநாள் இங்கிலாந்து அணியை அரையிறுதியில் சந்திக்கும் நிலையில் இதனை அவர் சொல்லி உள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சூப்பர் 12 குரூப்-2 பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னர் உள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா விளையாடும் நான்காவது அரையிறுதி இது. இந்நிலையில், இந்தியா கோப்பையை வெல்லும் என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

“இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக விளையாடும் என கருதுகிறேன். அதில் வென்று உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றும் என நினைக்கிறேன். சூர்யகுமார் யாதவ், விராட் கோலி என பலம் வாய்ந்த பேட்டிங் ஆர்டரை இந்தியா கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல எனது பார்வையில் ஒட்டுமொத்த அணியிலும் திறமையான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அதனால் இந்தியா கோப்பையை வெல்லும்” என டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

நாளை நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் முதல் அரையிறுதியில் விளையாடுகின்றன. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா விளையாடும் அரையிறுதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறுகிறது. வரும் ஞாயிறு அன்று மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT