டி20 உலகக் கோப்பை 
விளையாட்டு

T20 WC | அரையிறுதியில் அதிக முறை விளையாடிய அணிகள்

செய்திப்பிரிவு

சென்னை: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை நாக்-அவுட் சுற்றான அரையிறுதியில் விளையாடி உள்ள அணிகள் எவை என்பது குறித்து பார்ப்போம். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடர் அரையிறுதி சுற்றை தற்போது எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூஸிலாந்து - பாகிஸ்தான் மற்றும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளன. இதில் வெற்றி பெறும் அணிகள் வரும் ஞாயிறு அன்று கோப்பையை வெல்வதற்கான இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை செய்யும். இந்தச் சூழலில் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை அரையிறுதியில் விளையாடிய அணிகளின் விவரம் இங்கே.

  • பாகிஸ்தான் - 6 முறை
  • இந்தியா - 4 முறை (2007, 2014, 2016 மற்றும் 2022*)
  • இங்கிலாந்து - 4 முறை
  • நியூஸிலாந்து - 4 முறை
  • ஆஸ்திரேலியா - 4 முறை
  • இலங்கை - 4 முறை
  • மேற்கிந்திய தீவுகள் - 4 முறை
  • தென் ஆப்பிரிக்கா - 2 முறை

டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை நியூஸிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது. இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இங்கிலாந்து (2010), மேற்கிந்திய தீவுகள் (2012 மற்றும் 2016), இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

SCROLL FOR NEXT