சிட்னி: பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு இலங்கை அணியுடன் சென்றிருந்த குணதிலக மீது, கடந்த 2-ம் தேதி சிட்னி நகரிலுள்ள ஒரு பெண் பாலியல் வன்கொடுமை புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த சிட்னி, நியூ சவுத் வேல்ஸ் போலீஸார் அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி வீடியோ லிங்க் மூலமாக அவர் நேற்று சிட்னியிலுள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனிடையே, பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கியுள்ள குணதிலகவை, இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்துள்ளது.