விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இங்கிலாந்துக்கு கடினமாக இருக்கும்: ஜாண்டி ரோட்ஸ் கருத்து

பிடிஐ

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக அலாஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாண்டி ரோட்ஸ் கூறும்போது,

‘‘இந்திய சுற்றுப்பயணம் இங்கிலாந்து அணிக்கு கடினமானதாகவே இருக்கும். இந்தியாவில் 5 டெஸ்ட் போட்டிகளை விளையாடுவதற்கு உடல் அளவிலும், மனதளவிலும் வலிமையாக இருக்கவேண்டும்.

ஏனேனில் இங்கு நிலவும் சூழ்நிலைகள் இங்கிலாந்து அணிக்கு வசதியானதாக இருக் காது. இது நெருக்கடியை மேலும் அதிகரிக்கவே செய்யும். 3 போட்டிகள் கொண்ட தொடர் என்றால் அதில் சாதகமான விஷயங் களை பெறவும் முடியும், இழக்கவும் முடியும். ஆனால் 5 போட்டிகள் கொண்ட தொடர் என்றால் அது கடினமாகவே இருக்கும்’’ என்றார்.

ஐபிஎல் டி 20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நீண்டகால மாக பீல்டிங் பயிற்சியாளராக இருந்துவரும் ஜாண்டி ரோட்ஸ் தற்போது டெல்லியில் நடத்தப்பட்டு வரும் இளம் வீரர்களுக்கான ஐஜேபிஎல் டி 20 தொடரின் ஆலோசகராவும் செயல்பட்டு வருகிறார்.

டி 20 கிரிக்கெட் தொடர்பாக ரோட்ஸ் கூறும்போது,

‘‘டி 20 கிரிக்கெட் என்பது வெறும் பொழுது போக்கு விளையாட்டு அல்ல. குறுகிய வடிவிலான இந்த ஆட்டம் விராட் கோலி போன்ற திறன்மிகுந்த வீரர்களை உருவாக்குகிறது. மேலும் இந்த வகையிலான ஆட்டங் களால் வீரர்களின் திறன் வியக்கத் தக்க நிலைக்கு மாறியுள்ளன’’ என்றார்.

SCROLL FOR NEXT