அகமதாபாத்தில் சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் இந்திய அணி 38-29 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானை வீழ்த்தி 3-வது முறையாக மகுடம் சூடியது.
இந்நிலையில் உலகக் கோப்பையை வென்ற கபடி அணியில் இடம் பெற்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவித்துள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் கபடியை சேர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.