பிரிஸ்பேன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றில் பலப்பரீட்சை செய்தன. இந்தப் போட்டியை பார்க்க சென்றிருந்த ரசிகர் ஒருவர், இங்கிலாந்து அணி வீரர்களிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அப்படி என்ன கோரிக்கை அது என்பதை பார்ப்போம்.
பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் அரையிறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை உயிர்ப்போடு வைக்க முடியும் என்ற நிலை. அதனால் போட்டியில் கொஞ்சம் அழுத்தத்துடன் களம் இறங்கியது இங்கிலாந்து. இதற்கு முன்னர் சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றி, தோல்வி மற்றும் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.
டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து பேட் செய்தபோது இந்திய ரசிகர் ஒருவர் இங்கிலாந்து அணிக்கு ஒரு கோரிக்கை வைத்திருந்தார்.
“இங்கிலாந்து.. இந்தப் போட்டியில் வென்று விடவும் ப்ளீஸ். அப்போதுதான் இறுதிப் போட்டியில் உங்களை இந்திய அணியால் வீழ்த்த முடியும்” என அந்த ரசிகர் தெரிவித்திருந்தார். இதனை பதாகை மைதானத்தின் பார்வையாளர் மாடத்தில் நின்றபடி பதாகை ஏந்தி சொல்லி இருந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.