கே.எல்.ராகுல் 
விளையாட்டு

T20 WC | ரன் சேர்க்க தடுமாறும் ஓப்பனர்கள்: ராகுல், பாபர், வார்னர் மற்றும் பலர்

செய்திப்பிரிவு

நடப்பு டி20 உலகக் கோப்பையில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரன் சேர்க்க தடுமாறி வருகின்றனர். பெரும்பாலான அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்களுக்கு இதே நிலைதான். அது இந்தியாவின் ராகுல், பாகிஸ்தானின் பாபர் அசாம், ஆஸ்திரேலியாவின் வார்னர், இங்கிலாந்தின் பட்லர் என எல்லோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆட்டத்தின் தொடக்கத்தில் முதல் சில ஓவர்கள் பந்து வீச்சாளர்களுக்கு அதிகளவில் கைகொடுக்கிறது. அதிலும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடிய பெர்த் மைதானத்தில் பந்து எழும்பி வருவதை பார்க்க முடிகிறது.

அதேநேரத்தில் தொடக்க ஆட்டக்காரர்களில் சிலர் ஃபார்மில் இல்லாததும் இதற்கு ஒரு காரணம் என சொல்லலாம். சூப்பர் 12 சுற்றில் மட்டும் சில அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்கோர் செய்துள்ள ரன்களை பார்ப்போம்.

  • பாபர்: 0 ரன் (1 பந்துகள்), 4 (9) மற்றும் 4 (6)
  • ராகுல்: 4 (8), 9 (12) மற்றும் 9 (14)
  • பவுமா: 2* (2), 2 (6) மற்றும் 10 (15)
  • பட்லர்: 18 (18) மற்றும் 0 (2)
  • வார்னர்: 5 (6), 11 (10) மற்றும் 3 (7)
  • ஹேல்ஸ்: 19 (20) மற்றும் 7 (5)
SCROLL FOR NEXT