கோப்புப்படம் 
விளையாட்டு

T20 WC | தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தோல்வி: 2011 உலகக் கோப்பையுடன் ஒப்பீடு ஏன்?

செய்திப்பிரிவு

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி சூப்பர் 12 ‘குரூப் 2’ பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் இந்த தோல்வியை கடந்த 2011 உலகக் கோப்பை தொடருடன் ஒப்பிடப்பட்டு வருகிறது. அதுவும் பாசிட்டிவான வகையில். அது என்ன?

கடந்த 2011 உலகக் கோப்பை தொடர் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் நடத்தப்பட்டது. இதில் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இருந்தாலும் குரூப் சுற்றில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தோல்வியை தழுவி இருந்தது. நாக்பூரில் நடைபெற்ற அந்த போட்டியில் 2 பந்துகள் எஞ்சியிருக்க 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

அப்படியே அங்கிருந்து கட் செய்து நேற்றைய போட்டியில் பார்த்தால் தென்னாப்பிரிக்க அணி 2 பந்துகள் எஞ்சியிருக்க 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதைத்தான் இப்போது பாசிட்டிவான வகையில் இந்திய அணி உலகக் கோப்பை வெல்லும் என நெட்டிசன்கள் சொல்லி வருகின்றனர். ஸ்கிரிப்டுக்கு ஏற்ற வகையில் இந்திய அணி வீரர்கள் விளையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் அடுத்ததாக வங்கதேசம் (நவம்பர் 2) மற்றும் ஜிம்பாப்வே (நவம்பர் 6) அணிகளுடன் விளையாட உள்ளது. எப்படியும் இதில் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT