மெல்பேர்ன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியை நேரில் பார்த்து வரும் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய நாட்டில் பெய்து வரும் மழையை காட்டிலும் அங்குள்ள ஈக்கள் எரிச்சலூட்டி வருவதாக தெரிவித்துள்ளார். அது கவனம் பெற்று வருகிறது.
இந்த போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அங்கு மழை பொழிவு இருப்பதே இதற்கு காரணம். அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட் செய்து 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஆண்ட்ரூ 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். டக்கர், 34 ரன்கள் எடுத்தார்.
இந்த போட்டியில் இரு நாட்டு அணியின் வீரர்களும் தேசிய கீதம் பாட மைதானத்தில் குழுமியிருந்தனர். அப்போது அயர்லாந்து அணியின் ரசிகர் ஒருவர் தனது உடலில் ஒரு பிளாக்கார்டை தொங்க விட்டிருந்தார். அதில் அவர் சொல்லி இருந்த செய்திதான் சுவாரஸ்யமானது.
ஆஸ்திரேலியாவில் பெய்து வரும் மழையை காட்டிலும் ஈக்கள் மிகவும் எரிச்சலூட்டி வருவதாக அதில் அவர் சொல்லியிருந்தார். அதைப் பார்க்கும் போது இயக்குநர் ராஜமவுலி இயக்கிய ‘நான் ஈ’ படத்தில் வரும் சுதீப் கேரக்டர் தான் நினைவுக்கு வருகிறது.