கோலியை தூக்கும் ரோகித் | படம்: ட்விட்டர் 
விளையாட்டு

கோலியை தூக்கிய அந்தவொரு தருணம் ரோகித் சர்மா நம்மில் ஒருவரானார்: நெட்டிசன்கள் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இந்திய அணியின் வீரர் கோலியின் ஆட்டம் அமைந்தது. இந்திய அணி வெற்றி பெற்றதும் மைதானத்தில் குழுமியிருந்த 90,293 ரசிகர்களுக்கு முன்னர் கோலியை அலேக்காக தூக்கி கொண்டாடினார் இந்திய கேப்டன் ரோகித் சர்மா.

அந்தவொரு தருணம் போட்டியை நேரிலும், தொலைக்காட்சி மற்றும் செல்போன் வழியாகவும் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கொண்டாட்ட தருணமாக அமைந்தது. இந்த வெற்றி கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இதே சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா பெற்ற தோல்விக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. அதனை நெட்டிசன்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

ரோகித் சர்மா, கோலியை தூக்கிய அந்த தருணம் அவரது அபாரமான இன்னிங்ஸிற்கு கொடுக்கப்பட்ட மரியாதை எனவும் சொல்லலாம். 53 பந்துகளில் 82 ரன்களை சேர்த்திருந்தார் கோலி. இதில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து ஒரு கட்டத்தில் தடுமாறிக் கொண்டிருந்தது இந்தியா. ஆனால் அதை அப்படியே மீட்டெடுத்து வந்து வெற்றி தேடி தந்தனர் கோலியும், பாண்டியாவும். இருவரும் 113 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.

கோலியை தூக்கிய அந்தவொரு தருணம் ரோகித் சர்மா நம்மில் ஒருவரானார் என சொல்லி ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

சில பதிவுகள் இங்கே..

SCROLL FOR NEXT