விளையாட்டு

முதல் டெஸ்ட் போட்டிக்காக ராஜ்கோட் வந்து சேர்ந்த இந்திய அணி

பிடிஐ

இம்மாதம் 9-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட விராட் கோலி தலைமை இந்திய அணி ராஜ்கோட் வந்து சேர்ந்தது.

இன்று காலை 8.25 மணியளவில் கவுதம் கம்பீர், இசாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோருடன் விராட் கோலி மற்றும் மற்ற அணி உறுப்பினர்கள் ராஜ்கோட் வந்து சேர்ந்தனர்.

அங்கு செடேஸ்வர் புஜாரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணியுடன் இணைய சாலை வழியாக வந்த ஹர்திக் பாண்டியா 2 மணி நேரம் கழித்து அணியுடன் இணைந்தார்.

இன்று 28-வது பிறந்த தினம் காணும் கேப்டன் விராட் கோலி தனது பிறந்த தினத்தை ஹோட்டல் இம்பீரியலில் கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விராட் கோலியுடன் அனுஷ்கா சர்மா வந்துள்ளதாக சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஊடக மேலாளர் ஹிமான்ஷு ஷா தெரிவித்தார்.

ராஜ்கோட் விமான நிலையத்தில் கோலியை கேக்குகள் மற்றும் பரிசுப்பொருட்களுடன் வாழ்த்த ரசிகர்கள் பலர் கூடியிருந்தனர். ஆனால் அனுஷ்கா சர்மாவுடன் நேராக விடுதிக்கு விரைந்தார் விராட் கோலி.

SCROLL FOR NEXT