நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி. பவர் ஹிட்டர்கள், ஆறடி உயர பவுலர்கள் என டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டுக்கே உரித்தான சர்வ வல்லமையும் கொண்ட அணிக்கு இப்படி ஒரு நிலை. “நம்ம வெஸ்ட் இண்டீஸ் டீமுக்கு என்னதான் ஆச்சு?” என மீம் போட்டு ரசிகர்கள் ட்ரோல் செய்யாததுதான் குறை.
நடப்பு டி20 உலகக் கோப்பையில் விளையாட அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள் ஒவ்வொருவரும் கிரிக்கெட் உலகில் நடைபெற்று வரும் டி20 லீக் தொடர்களுக்கான அணிகளில் தப்பாமல் இடம்பிடித்து இருப்பவர்கள். நிக்கோலஸ் பூரன், ஹோல்டர், ரோவ்மேன் பவல், அல்சாரி ஜோசப், மெக்காய் போன்ற வீரர்கள் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் லீக் தொடரில் பங்கேற்று விளையாடி வருபவர்கள். அந்த அணியில் ஹெட்மயர் இல்லாதது மட்டும்தான் ஒரே ஒரு குறை.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாகவும் மேற்கிந்திய தீவுகள் அணி திகழ்கிறது. கிரிக்கெட் களத்தில் நெடுங்காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த அணிக்கு இப்படியொரு நிலை. பல ஜாம்பவான்கள் அந்த அணிக்காக விளையாடி உள்ளனர். ரிச்சர்ட்ஸ், லாரா, வாஷ், கர்ட்லி அம்ப்ரோஸ், கிறிஸ் கெயில் போன்ற வீரர்களை கிரிக்கெட் உலகிற்கு கொடுத்த அணி. இப்போது அந்த அணியின் புதிய வார்ப்புகள் சோபிக்க தவறி உள்ளனர். எப்படியும் சூப்பர் 12 சுற்று வரை இந்த அணி முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது அப்படியே காற்றில் கரைந்துள்ளது.
இதுவரையில் மேற்கிந்திய தீவுகள் அணி பங்கேற்று விளையாடி உள்ள 8 டி20 உலகக் கோப்பை எடிஷனில் அதன் செயல்பாடு எப்படி?
இப்படி டி20 கிரிக்கெட் களத்தில் சாம்பியனாக வலம் வந்த அணி இன்று புகழின் உச்சியில் இருந்து வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த சரிவிலிருந்து அந்த அணி மீண்டு வர அதிக நேரம் தேவைப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் அதன் சொந்த மண்ணில் நடைபெற உள்ளது. நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் வெகுண்டு எழும் என நம்புவோம்.