விளையாட்டு

ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன்: 2-வது சுற்றில் சாய்னா

பிடிஐ

ஹாங் காங் ஓபன் பாட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றுக்கு இந்தியா வின் சாய்னா நெவால் முன்னேறி னார்.

கவுலூன் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற 5-ம் நிலை வீராங்க னையான சாய்னா தனது முதல் சுற்றில் 12-ம் நிலை வீராங்கனை யான தாய்லாந்தின் போர்ன்டிப்பை 12-21, 21-19, 21-17 என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார்.

கடந்த வாரம் நடைபெற்ற சீன ஓபன் போட்டியில் போர்ன்டிப்பிடம் சாய்னா முதல் சுற்றில் தோல்வியடைந்திருந்தார். இதற்கு நேற்றைய ஆட்டத்தில் சாய்னா தக்க பதிலடி கொடுத்தார்.

ஆடவர் பிரிவில் இந்தியாவின் பிரனோய் 21-16, 21-18 என்ற நேர் செட்டில் சீனாவின் குயோ பினையும், ஷமீர் வர்மா 22-20, 21-18 என்ற நேர் செட்டில் ஜப்பானின் டகுமா உயிடாவையும் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர். இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அனு அட்ரி, சுமித் ரெட்டி ஜோடி 15-21, 8-21 என்ற நேர் செட்டில் கொரியாவின் சோக்யு ஷோயி, கோ சங் ஹையுன் ஜோடியிடம் தோல்வியடைந்தது.

SCROLL FOR NEXT