விளையாட்டு

T20 WC வார்ம்-அப் | ‘இதற்குமேல் எதிர்கொள்ள மனமில்லை’ - போட்டியின்போது சூரியகுமார் யாதவ் அதிருப்தி?

செய்திப்பிரிவு

பிரிஸ்பேன்: இன்று நடந்த வார்ம்-அப் போட்டியில் இந்திய வீரர் சூரியகுமார் ஒருவித அதிருப்தியுடன் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இன்று பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

உச்சக்கட்ட பார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் இந்தப் போட்டியிலும் அட்டகாசமாக ஆடினார். 6 பவுண்டரி 1 சிக்சர் எடுத்து 33 பந்தில் 50 ரன்கள் என்று விளையாடினார். என்றாலும், சூரியகுமார் யாதவ் பேட்டிங் செய்யும் ஒருவித அதிருப்தியிலேயே இருந்தார். பவுண்டரி, சிக்ஸர் விளாசும்போது அவரிடம் வழக்கமாக காணப்படும் உற்சாகமும் இன்றைய போட்டியில் வெளிப்படவில்லை.

ஒருவித அமைதியுடனே பேட்டிங் செய்த சூரியகுமார் யாதவ், 50 ரன்களை தொட்டதும் எதிரில் நின்ற சக வீரர் அக்சர் படேலிடம், "இதற்குமேல் பந்துவீச்சை எதிர்கொள்ள மனம் இல்லை" என்று தெரிவித்தார். இப்படி தெரிவித்த அடுத்த பந்தே அவர் அவுட் ஆகவும் செய்தார். முன்னதாக, அவரின் இந்த உரையாடல் ஸ்ட்ம்ப் மைக்கில் பதிவாகியது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT