விளையாட்டு

T20 WC | புகுந்து விளையாடலாம்... மைதானம் பெருசு... - ரவிச்சந்திரன் அஸ்வின்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய மைதானங்கள், பந்து வீச்சாளர்கள் தாக்குதல் ஆட்டம் தொடுக்க முழு சுதந்திரம் அளிக்கும் என இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அஸ்வின் மேலும் கூறியதாவது: இந்தியாவில் நடைபெறும் டி 20 போட்டிகளிலும், சர்வதேச இருதரப்பு டி 20 தொடர்களிலும் பேட்ஸ்மேன்கள் மைதானத்தை சுற்றிலும்பந்துகளை அடித்து நொறுக்குவார்கள் என்று கூறுவது நியாயமானதுதான். ஏனெனில் இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் சிறியவை. 30 அடி வட்டத்துக்கு அருகிலேயே எல்லைக்கோடு உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் அதேவேளையில் ஆஸ்திரேலியாவில் மைதானத்தின் அளவுகள் பெரியவை. எல்லைக்கோடும் தூரமாக இருக்கும். இது பந்து வீச்சாளர்கள் வேலை செய்வதற்கான உரிமத்தை கொடுக்கும். எந்த நீளத்தில் பந்து வீச வேண்டும் என்பதை அறிந்திருப்பதும் முக்கியம்.

2 வாரங்களுக்கு முன்னதாகவே ஆஸ்திரேலியா வந்துவிட்டோம். டி 20 உலகக் கோப்பைதொடரை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளோம். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் இதுபோன்று நாங்கள் நேரத்தை செலவிட்டது கிடையாது. சூழ்நிலையை தகவமைத்துக்கொள்வதற்காகவே இந்த ஏற்பாடு.முக்கியமாக நாங்கள் சீக்கிரம் இங்கு வந்ததன் நோக்கமே வேகம் மற்றும் பவுன்ஸர்களுக்கு பழகுவதுதான். அணியில் புதிதாக ஒருசில வீரர்கள். அவர்கள் இங்குள்ள சூழ்நிலையில்பழகுவதற்கு இது ஒரு சிறந்த நேரமாகஇருக்கும். முதல் ஆட்டம் நெருங்கும் நேரத்தில் உற்சாகமாக இருக்க வேண்டும் மற்றும் நிலைமைகள் என்னவாகஇருக்கும் என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT