ஹாக்கி போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனை, கோல் கீப்பர் ஆகியோருக்கு ஆண்டு தோறும் சர்வதேச ஹாக்கி சம்மேளனம் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு விருதுக்கான பட்டியல் துபையில் நடைபெற்று வரும் ஹாக்கி தொடர்பான மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சிறந்த வீரர், வீராங்கனை ஆகியோருக்கான பரிந்துரை பட்டியில் இந்திய வீரர், வீராங்கனை யாரும் இடம்பெறவில்லை. மாறாக சிறந்த கோல்கீப்பருக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய வீரர் ஸ்ரீஜேஷ் இடம் பெற்றுள்ளார்.
அவருடன் அர்ஜென்டினாவின் ஜூயன் விவால்டி, நெதர்லாந்தின் ஜாப் ஸ்டாக்மான், பெல்ஜியத்தின் வின்சென்ட் வனாஸ்ச், அயர்லாந்தின் டேவிட் ஹார்ட்டி ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றுள்ளது. வளர்ந்து வீரர் விருதுக்கு இந்தியாவின் ஹர்மான்பிரித் சிங் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட உள்ளது.