தவான் | கோப்புப்படம் 
விளையாட்டு

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: தவான் தலைமையில் இந்திய அணி அறிவிப்பு

செய்திப்பிரிவு

மும்பை: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தவான் தலைமையில் விளையாடுகிறது. இளம் வீரர்களுக்கு இதில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் முடிந்ததும் இரு அணிகளும் ஒருநாள் தொடரில் பலப்பரீட்சை செய்ய உள்ளன. அதற்கு ஏற்ற வகையில் பிசிசிஐ தற்போது இந்திய அணியை அறிவித்துள்ளது.

இந்திய அணி: ஷிகர் தவான் (கேப்டன்), ஷ்ரேயஸ் ஐயர் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், ரஜத் பட்டிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், ஆவேஷ் கான், முகமது சிராஜ், தீபக் சஹார்.

வரும் 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ரஜத் பட்டிதார் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

SCROLL FOR NEXT